பாராலிம்பிக்ஸில் மகளிர் 100 மீட்டர் டி35 பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பாராலிம்பிக்ஸில் டிராக் போட்டிகளில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.
மகளிர் 100 மீட்டர் டி35 பிரிவில் சீனாவின் ஸியா ஸோவ் மற்றும் கியான்கியான் குவோ ஆகியோர் முதலிரு இடங்களைப் பிடித்தார்கள். இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 14.21 நொடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம்பிடித்தார்.
அவானி லேகரா (தங்கம்), மோனா அகர்வால் (வெண்கலம்) வரிசையில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தை வென்று தந்துள்ளார் பிரீத்தி பால் (வெண்கலம்).
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் கடந்த மே மாதம் போட்டியிட்டார் பிரீத்தி பால். இதில் மகளிர் 200 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலம் வென்றார். பாராலிம்பிக்ஸ் முதன்முறையாகக் கலந்துகொண்ட இவர் தற்போது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.