நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

"நிச்சயமாக இது என்னுடைய சிறந்த ஆட்டம் கிடையாது”.
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!@ChessbaseIndia

நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், பிரக்ஞானந்தா உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

இத்தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில், டிங் லிரனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றில் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்டு கார்ல்சனை வீழ்த்தி, 5.5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. ‘கிளாசிகல்’ முறையில், கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த வெற்றிக்குக் பிறகு பேசிய பிரக்ஞானந்தா, “மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆட்டம் சுவாரசியமாக இருந்தது. ஆரம்பம் நன்றாக அமைந்தாலும், ஒரு சில இடங்களில் சொதப்பினேன், ஆனாலும் அதனை சரிசெய்து வெற்றி பெற்றேன். இது மிகப்பெரிய தொடர், இன்னும் 7 ஆட்டங்கள் மீதமுள்ளது. நிச்சயமாக இது என்னுடைய சிறந்த ஆட்டம் கிடையாது” என்றார்.

அதேபோல, பெண்கள் பிரிவில் மூன்றாவது சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in