இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸி. வெல்லும்: பாண்டிங் நம்பிக்கை

இம்முறை ஆஸ்திரேலிய அணி தங்களை நிரூபிக்க வேண்டும்.
பாண்டிங்
பாண்டிங் ANI
1 min read

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடவுள்ள 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.

இந்நிலையில் இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

ஐசிசி-க்கு அளித்த பேட்டியில், “இத்தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சொந்த மண்ணில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியடைந்ததால் இம்முறை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்த்தில் உள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் டிரா ஆகும் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எனவே, 3-1 என்ற கணக்கில் இத்தொடரை ஆஸ்திரேலியா வெல்லும்” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15 பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in