
ஐபிஎல் ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி தங்களது முன்னாள் கேப்டன் ரிஷப் பந்த் உள்பட 10 வீரர்களை கோட்டைவிட்டது.
ரிஷப் பந்தை தேர்வு செய்ய ஆரம்பம் முதல் ஆர்வம் காட்டாத தில்லி அணி ரூ. 20.75 கோடிக்கு லக்னௌ அணி தேர்வு செய்த பிறகு ஆர்டிஎம் முறையை பயன்படுத்தியது. லக்னௌ அணி ரூ. 27 கோடிக்கு தொகையை உயர்த்த, தில்லி விலகியது.
ஸ்ரேயஸ் ஐயருக்காக ரூ. 26.5 கோடி வரை சென்று பார்த்தும், அவரை ரூ. 27 கோடிக்கு பஞ்சாபிடம் இழந்தது தில்லி.
நேஹல் வதேராவை ரூ. 4.2 கோடிக்கு தேர்வு செய்தது பஞ்சாப். ரூ. 4 கோடி வரை முயற்சித்தது தில்லி.
ரசிக் சலாம் தாருக்காக ஆர்டிஎம் முறையை பயன்படுத்தியும், அவரை ரூ. 6 கோடிக்கு ஆர்சிபியிடம் இழந்தது தில்லி.
13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்காக ஒரு கோடி வரை சென்று பார்த்தும், அவரை ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தானிடம் தவறவிட்டது தில்லி.
வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோராவை ரூ. 1.8 கோடிக்கு தேர்வு செய்தது கேகேஆர். ரூ. 1.7 கோடி வரை முயற்சித்தது தில்லி.
இதுதவிர அனுகுல் ராய், மணிமாறன் சித்தார்த், ஜீஷன் அன்சாரி, ஸ்வப்னில் சிங் போன்ற வீரர்களையும் சொற்ப தொகைகளில் எதிரணிகளிடம் நூலிழையில் இழந்தது தில்லி.