ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பட்லர் விலகிய நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பில் சால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் செப். 11 அன்று தொடங்குகிறது. இத்தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பில் சால்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நடைபெற்ற ‘தி 100’ போட்டியில் சால்ட் கேப்டனாக செயல்பட்டார்.
டி20 தொடர் முடிந்தப் பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் இத்தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் தொடர் செப்.19 அன்று தொடங்குகிறது.
பட்லர் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.