ஐபிஎல் 2024: கொல்கத்தாவில் ஜேசன் ராய்-க்குப் பதில் பில் சால்ட் தேர்வு

ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் 2024: கொல்கத்தாவில் ஜேசன் ராய்-க்குப் பதில் பில் சால்ட் தேர்வு
ANI

ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து விலகிய ஜேசன் ராய்-க்குப் பதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பில் சால்ட்டைத் தேர்வு செய்துள்ளது.

ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

பில் சால்ட் கடந்த ஐபிஎல் பருவத்தில் தில்லி கேபிடல்ஸுக்காக விளையாடினார். தில்லி கேபிடல்ஸுக்காக 9 ஆட்டங்களில் விளையாடிய அவர் 163.91 ஸ்டிரைக் ரேட்டில் இரு அரை சதங்கள் உள்பட 218 ரன்கள் எடுத்தார்.எனினும், ஐபிஎல் ஏலத்தின்போது இவர் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை.

ஃபில் சால்ட் கடைசியாக கடந்த டிசம்பரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். இந்தத் தொடரில் அடுத்தடுத்த ஆட்டங்களில் இரு சதங்கள் அடித்து அசத்தினார். ஐபிஎல் ஏலம் நடைபெற்ற டிசம்பர் 19-ல் இரண்டாவது சதத்தை அடித்ததால் ஏலத்தில் அது பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.

தற்போது ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதையடுத்து, ஃபில் சால்ட் மாற்று வீரராக ரூ. 1.5 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜேசன் ராய் ஐபிஎல் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவது இது முதன்முறையல்ல. ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ் (தற்போது தில்லி கேபிடல்ஸ்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2020-ல் தில்லி கேபிடல்ஸுக்காக விளையாடியபோது ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். 2022-ல் குஜராத் டைடன்ஸுக்காக விளையாடியபோதும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார்.

ஐபிஎல் 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை மார்ச் 23-ல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஷ்ரேயஸ் ஐயர் கொல்கத்தாவின் கேப்டனாக உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in