சாம்பியன்ஸ் கோப்பை: நிபந்தனை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்?

2031 வரை இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்காது...
சாம்பியன்ஸ் கோப்பை: நிபந்தனை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்?
1 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த சில நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி அடுத்தாண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இப்போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ அறிவித்தது. தனது ஆட்டங்களை துபாயில் விளையாட இந்தியா தயாராக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஷின் நாக்வி, இந்திய அணி பாகிஸ்தான் வராவிட்டால், நாங்கள் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று விளையாடலாமா வேண்டாமா என்பதை எங்கள் அரசாங்கம் தான் முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்படும் என தகவல் வெளியானது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்தியா மோதும் ஆட்டங்களை வேறுஇடத்தில் நடத்த சில நிபந்தனைகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2031 வரை இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்காது என்றும், ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவதால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க, தங்களின் பங்குத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in