மீண்டும் மீண்டும் டாஸ் தோற்கும் ருதுராஜ்: பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

சிஎஸ்கேவில் பதிரனா, துஷார் தேஷ்பாண்டே இல்லை.
மீண்டும் மீண்டும் டாஸ் தோற்கும் ருதுராஜ்: பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் இன்றைய ஆட்டம் புதிய ஆடுகளத்தில் நடைபெறுகிறது. இதனால், ஒருபுறம் பவுண்டரி தூரமாகவும், இன்னொரு புறம் பவுண்டரி தூரம் சிறியதாகவும் இருக்கிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சிஎஸ்கேவில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பதிரனா லேசான காயம் காரணமாக விளையாடவில்லை. துஷார் தேஷ்பாண்டேவுக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர் விளையாடவில்லை. இவர்களுக்குப் பதில் ஷார்துல் தாக்குர் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிச்சர்ட் கிளீசன் சிஎஸ்கேவுக்காக அறிமுகம் ஆகிறார்.

தொடர்ந்து டாஸ் தோற்று வருவதால், அணியிலுள்ள அனைவரும் முதல் பேட்டிங் செய்வதற்குத் தயாராக இருப்பதாக ருதுராஜ் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in