சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரு ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் தரம்சாலாவில் மோதுகின்றன இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் லக்னௌவில் விளையாடுகின்றன.
முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
நடப்பு ஐபிஎல் பருவத்தில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 10-வது முறையாக டாஸில் தோற்றார். இந்த ஆட்டத்தில் முஸ்தபிஸூர் ரஹ்மானுக்குப் பதில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
10 முறை டாஸில் தோற்றாலும், 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருப்பது நேர்மறையான விஷயம் என்றார் ருதுராஜ் கெயிக்வாட். தோனியின் அறிவுரைக்குப் பிறகு ஓய்வறையில் டாஸில் வெல்வதற்கானப் பயிற்சிகளில் ஈடுபடுவதாக ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு டாஸ் இன்னும் கைகூடாமல் இருக்கிறது.