இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பதிரனா, மதுஷங்கா விலகல்!

முதல் ஒருநாள் ஆட்டம் நாளை (ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ளது.
பதிரனா, மதுஷங்கா விலகல்!
பதிரனா, மதுஷங்கா விலகல்!ANI
1 min read

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக பதிரனா, மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது.

டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி. இந்நிலையில் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது. ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. அசலங்கா கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதில் இடம்பெற்றிருந்த பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

மாற்று வீரராக புதுமுக வீரர் முஹமது சிராஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, மற்றொரு மாற்று வீரர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த 3-வது டி20 ஆட்டத்தில் பதிரனாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய மதுஷங்கா, காயம் காரணமாக அடுத்த இரண்டு ஆட்டங்களிலிருந்து விலகினார்.

ஏற்கெனவே காயம் காரணமாக துஷ்மந்தா சமீரா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் காயம் காரணமாக டி20 தொடருக்கு முன்னதாகவே விலகினார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in