பிஜிடி தொடரின் 3-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பிஜிடி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்டில் விளையாடும் ஆஸி. அணியின் 11 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
2-வது டெஸ்டில் காயம் காரணமாக ஹேசில்வுட்டுக்குப் பதிலாக போலண்ட் இடம்பெற்றார். இப்போது, காயத்திலிருந்து மீண்டு வந்ததால் ஹேசில்வுட் 3-வது டெஸ்டில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இதனால் போலண்ட் இந்த டெஸ்டில் விளையாடவில்லை.
மற்றபடி முதல் இரு டெஸ்டுகளில் விளையாடிய பேட் கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 3-வது டெஸ்டிலும் விளையாடவுள்ளார்கள்.