பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் இந்திய அணி காலிறுதியில் தோல்வி அடைந்தது.
இந்திய வீராங்கனைகளான மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் 24 வயதான அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், “விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாடு சென்று உயர் கல்வி கற்க திட்டமிட்டுள்ளேன். எனது சகோதரர் நாசாவில் பணியாற்றி வருகிறார். அவர் தான் எனது ரோல் மாடல். படிப்பை தொடரப் போகிறேன் என்று நான் சொன்னதும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். எனவே படிப்பை நல்லபடியாக முடிக்க விரும்புகிறேன்” என்று அர்ச்சனா காமத் தெரிவித்துள்ளார்.