பாரிஸ் பாராலிம்பிக்ஸில் இதுவரை 20 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது இந்தியா.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்த பாராலிம்பிக்ஸில் இதுவரை 20 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்ற பாராலிம்பிக்ஸ் போட்டியாக இது அமைந்துள்ளது.
முன்னதாக, 2020 பாராலிம்பிக்ஸில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது.
தற்போது பாராலிம்பிக்ஸ் நிறைவடைய இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
நேற்று (செப். 3) இந்தியாவுக்கு 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்தன.
செப். 3-ல் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் விவரம்
* ஆடவருக்கான டி63 உயரம் தாண்டுதலில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம்
* ஆடவருக்கான டி63 உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம்
* ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம்
* ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் சுந்தர் சிங் வெண்கலப் பதக்கம்
* 400 மீ. டி20 ஓட்டப்பந்தயத்தில் தீப்தி வெண்கலப் பதக்கம்