பாராலிம்பிக்ஸ்: ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!

பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு ஒரு நாளில் அதிகப் பதக்கங்கள் கிடைத்த நாளாக...
பாராலிம்பிக்ஸ்: ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!
1 min read

பாராலிம்பிக்ஸில் நேற்று (செப். 2) ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.

இந்நிலையில் நேற்றைய நாள் இந்தியாவுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக அமைந்தது. ஒரே நாளில் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றது இந்தியா.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவுக்கு ஒரு நாளில் அதிகப் பதக்கங்கள் கிடைத்த நாளாக நேற்று அமைந்தது. முன்னதாக 1984, 2016 ஆகிய வருடங்களில் ஒரு நாளில் 4 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை உடைத்து புது மைல்கல்லை எட்டியது இந்தியா.

செப். 2-ல் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் விவரம்

* சுமித் அன்டில் - ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் தங்கம்

* நிதேஷ் குமார் - பாட்மிண்டனில் எஸ்எல்3 பிரிவில் தங்கம்

* சுஹாஸ் யாத்திராஜ் - பாட்மிண்டன் எஸ்எல்4 பிரிவில் வெள்ளி

* துளசிமதி முருகேசன் - பாட்மிண்டன் எஸ்யு5 பிரிவில் வெள்ளி

* யோகேஷ் கத்துன்யா - வட்டு எறிதல் எஃப் 56 பிரிவில் வெள்ளி

* மனிஷா ராமதாஸ் - பாட்மிண்டன் எஸ்யு5 பிரிவில் வெண்கலம்

* நித்யஸ்ரீ - பாட்மிண்டன் எஸ்ஹெச்6 பிரிவில் வெண்கலம்

* ராகேஷ் குமார் - ஷீத்தல் தேவி வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in