பாராலிம்பிக்ஸ் குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
நேற்றைய நாள் முடிவில் 20 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப் 46 பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் சச்சின் கிலாரி 16.32 மீ. தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 21-வது பதக்கம் கிடைத்துள்ளது.
இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது.