பாராலிம்பிக்ஸ் ஆடவர் ஈட்டி ஏறிதல் எஃப் 41 பிரிவில் இந்தியாவின் நவ்தீப் சிங்குக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் ஈட்டி எறிதல் (எஃப் 41 பிரிவு) விளையாட்டின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் 47.65 மீ. தூரம் வீசி ஈரானை சேர்ந்த பெய்ட் சயாஹ் முதல் இடத்தைப் பிடித்தார். இந்தியாவின் நவ்தீப் சிங் 47.32 மீ. தூரம் வீசி 2-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸில் தனது தனிப்பட்ட சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில் முதல் இடத்தைப் பிடித்த பெய்ட் சயாஹ் பாராலிம்பிக்ஸ் விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு பதக்கம் வழங்கப்படவில்லை. ஆட்டம் முடிந்த பிறகு தேசிய கொடிக்கு பதில் வேறு கொடியை காட்டியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் 2-வது இடம் பிடித்த இந்தியாவின் நவ்தீப் சிங்குக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளது.