பாராலிம்பிக்ஸ் க்ளப் த்ரோ போட்டியில் இந்தியாவின் தரம்பிர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான க்ளப் த்ரோ எஃப் 51 பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் தரம்பிர் 34.92 மீ. தூரம் வீசி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதே பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான பிரனவ் 34.59 மீ. தூரம் வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 5-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளது.