பாராலிம்பிக்ஸ் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் யங் சூ சாவிடம் 17-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதன் மூலம் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். யங் சூ சா டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வென்றிருந்தார்.
அதேபோல, மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் மகளிருக்கான பாட்மிண்டனில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.