ஒலிம்பிக்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டேனா?: சர்ச்சைக்குரிய பராகுவே நீச்சல் வீராங்கனை விளக்கம்

லுவானா அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஒலிம்பிக்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டேனா?: சர்ச்சைக்குரிய பராகுவே நீச்சல் வீராங்கனை விளக்கம்
ஒலிம்பிக்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டேனா?: சர்ச்சைக்குரிய பராகுவே நீச்சல் வீராங்கனை விளக்கம்@luanalonsom
2 min read

ஒலிம்பிக்ஸிலிருந்து தான் வெளியேற்றப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பராகுவே நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ.

பராகுவே நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாகக் கூறி அவரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள லுவானா அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிருக்கான 100 மீ. பட்டர்ஃபிளை நீச்சல் விளையாட்டில் பங்கேற்ற லுவானா, அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அவர் ஆடை அணியும் விதம் குறித்தும் பிறருடன் பழகுவது குறித்தும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஒலிம்பிக்ஸ் கிராமத்தைவிட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருந்ததாகவும், இதற்காக அவர் ஒலிம்பிக்ஸிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து லுவானா அலோன்சோ தனது இன்ஸ்டாகிராமில், “நான் ஒலிம்பிக்ஸில் வெளியேற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இது குறித்து எந்த அறிக்கையையும் நான் கொடுக்க விரும்பவில்லை” என்றார்.

மேலும், இதன் தொடர்ச்சியாக லுவானா அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in