டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சமீபத்தில், தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற முஹமது அமிருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ANI

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 3-வது முறையாக பாகிஸ்தான் அணியை வழிநடத்துகிறார் பாபர் ஆஸம்.

பாகிஸ்தான் அணியில் அனுபவமிக்க ஃபகார் ஸமான், முஹமது ரிஸ்வான், இஃப்திகார் அஹமது, இமாத் வாசிம், சதாப் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், வேகப்பந்து வீச்சில் மிரட்டக்கூடிய ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், சமீபத்தில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற முஹமது அமிருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்றே (மே 25) கடைசித் தேதி என ஐசிசி அறிவித்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் பிறகு ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணத்தால் அணியை அறிவிக்க தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாபர் ஆஸம் (கே), சயிம் அயூப், ஃபகார் ஸமான், முஹமது ரிஸ்வான், அஸாம் கான், உஸ்மான் கான், இஃப்திகார் அஹமது, இமாத் வாசிம், சதாப் கான், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமது, அப்பாஸ் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், முஹமது அமிர்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in