பாக். வீரர்களின் இன்ஸ்டகிராம் கணக்குகள் முடக்கம்!

பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் படம் மே 9 அன்று இந்தியாவில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது.
பாக். வீரர்களின் இன்ஸ்டகிராம் கணக்குகள் முடக்கம்!
ANI
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாபர் ஆஸம், ஷஹீன் அஃப்ரிடி மற்றும் முஹமது ரிஸ்வான் உள்ளிட்டோரது இன்ஸ்டகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைப்பது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

மேலும் பாகிஸ்தான் நடிகர்கள், ஊடகங்களின் சமூக ஊடகப் பக்கங்களை மத்திய அரசு முடக்கத் தொடங்கியது. பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் படம் மே 9 அன்று இந்தியாவில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான தவறான கருத்துகளைப் பரப்புவதாகச் சொல்லி டான் நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டகிராம் பக்கங்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன. பாபர் ஆஸம், ஷஹீன் அஃப்ரிடி, ஷதாப் கான், முஹமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களுடைய கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய இன்ஸ்டகராம் கணக்குகளை திறந்து பார்த்தால் முடக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in