7 ஆண்டுகளுக்குப் பிறகு..: ஆஸி.யில் ஆஸி.யை வீழ்த்திய பாகிஸ்தான்

கடைசி ஒருநாள் ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு..: ஆஸி.யில் ஆஸி.யை வீழ்த்திய பாகிஸ்தான்
@TheRealPCB
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 35 ரன்கள் எடுக்க, ஆஸி அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தது அயுப் மற்றும் அப்துல்லா ஷபிக் கூட்டணி. இருவரும் சேர்ந்து 20.2 ஓவர்களில் 137 ரன்கள் சேர்த்தனர். அயுப் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 71 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்துல்லா ஷபிக் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 69 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

2017-க்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இத்தொடரை 1-1 என சமன் செய்தது. கடைசி ஒருநாள் ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in