மகளிர் குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா போா்கோஹெய்ன்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா போா்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
லவ்லினா போா்கோஹெய்ன்!
லவ்லினா போா்கோஹெய்ன்!@India_AllSports
1 min read

ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன் வெற்றி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 5-வது நாளான இன்று மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் லவ்லினா போா்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

logo
Kizhakku News
kizhakkunews.in