பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கத்தை வென்றது சீனா.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கத்தை வென்றது சீனா. இதன் மூலம் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை வென்ற நாடு என்ற பெருமையை பெற்றது.
தென் கொரியாவுக்கு எதிரான இறுதிச் சுற்று ஆட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஷெங் லிஹாவ் - யூடிங் ஜோடி வெற்றி பெற்று இந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்க பதக்கத்தை வென்றது.
இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்ததன் மூலம் தென் கொரியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. கஜகஸ்தானுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
முன்னதாக, இந்திய கலப்பு இரட்டையர் அணி தகுதி சுற்றிலேயே வெளியேறியது.