வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: அரையிறுதியில் இந்திய அணி!

காலிறுதி சுற்றில் 5-3 என்ற கணக்கில் தீரஜ் - அங்கிதா இணை வெற்றி பெற்றுள்ளது.
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: அரையிறுதியில் இந்திய அணி!
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: அரையிறுதியில் இந்திய அணி!
1 min read

ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

7-வது நாளான இன்று வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தீரஜ் - அங்கிதா இணை 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதியில் ஸ்பெயினை எதிர்கொண்ட இந்திய அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய இணை என்ற பெருமையை பெற்றுள்ளது தீரஜ் - அங்கிதா இணை.

logo
Kizhakku News
kizhakkunews.in