வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: காலிறுதியில் இந்திய அணி!

காலிறுதி ஆட்டங்கள் இன்று மாலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: காலிறுதியில் இந்திய அணி!
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு: காலிறுதியில் இந்திய அணி!
1 min read

ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

7-வது நாளான இன்று வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திரஜ் - அங்கிதா இணை 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

காலிறுதி ஆட்டங்கள் இன்று மாலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in