மகளிர் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனிகா பத்ரா தோல்வி அடைந்து வெளியேறினார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனிகா பத்ரா இன்று விளையாடினார்.
ஜப்பான் வீராங்கனையான ஹிரானோவை எதிர்கொண்ட அவர் 6-11, 9-11, 14-12, 8-11, 6-11 என்கிற புள்ளிகளை பெற்று 1-4 என்ற கேம் கணக்கில் தோல்வி அடைந்தார்.
முன்னதாக, ஒலிம்பிக்ஸில் டேபிஸ் டென்னிஸ் விளையாட்டில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருந்தார் மனிகா பத்ரா.