ஆடவர் பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்!

21-18, 21-12 என்ற கேம் கணக்கில் உலகின் 3-ம் நிலை வீரரான ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினார்.
ஆடவர் பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்!
ஆடவர் பாட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்!@India_AllSports
1 min read

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் பாட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு லக்‌ஷ்யா சென் தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 5-வது நாளான இன்று ஆடவர் பாட்மிண்டனில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில், 21-18, 21-12 என்ற கேம் கணக்கில் உலகின் 3-ம் நிலை வீரரான ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினார் இந்திய வீரர் லக்‌ஷ்யா சென்.

இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in