
ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் 4-வது நாளான நேற்று ஆடவர் ஹாக்கியின் லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே, முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது ஆட்டத்தில் டிரா செய்தது.
இந்நிலையில், இந்திய அணி இரண்டு லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் 7 புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிகளை எதிர்கொள்கிறது.
2020 ஒலிம்பிக்ஸில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.