பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட அர்ஜுன் பபுதா!

இறுதிச் சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
அர்ஜுன் பபுதா!
அர்ஜுன் பபுதா!
1 min read

10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் 3-வது நாளான இன்று 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இந்தியா சார்பாக பங்கேற்ற அர்ஜுன் பபுதா 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in