பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 27 பேர் கொண்ட இந்தியத் தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், 27 பேர் கொண்ட இந்தியத் தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
பிரவீன் சித்ரவேல் - (டிரிபிள் ஜம்ப்)
சந்தோஷ் தமிழரசன் - (400 மீட்டர் தடை தாண்டுதல்)
ராஜேஷ் ரமேஷ் - (4*400 மீட்டர் பிரிவு)
சுபா வெங்கடேசன் - (4*400 மீட்டர் பிரிவு)
வித்யா ராம்ராஜ் - (4*400 மீட்டர் பிரிவு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.