ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஹிமானி மோர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் ஷிம்லாவில் திருமணம் நடைபெற்றது.
திருமணப் புகைப்படங்களை நீரஜ் சோப்ரா இன்ஸ்டகிராம் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். ஹிமானி மோர் தற்போது அமெரிக்காவில் படித்து வருவதாக நீரஜ் சோப்ராவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவராக ஹிமானி மோர் உள்ளார். முன்பு டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள அவர், தற்போது பயிற்சிகளை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் தேன்நிலவுக்கு வெளிநாடு சென்றுள்ளதால், இந்தியா திரும்பியவுடன் வரவேற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் விரைவில் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று பெரும் கவனத்தை ஈர்த்தவர் நீரஜ் சோப்ரா. 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.