
சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை பிப்ரவரி 19 அன்று கராச்சியில் தொடங்குகிறது. மார்ச் 9 அன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகின்றன.
பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெறுகிறது. இந்த மூன்று மைதானங்களிலும் தலா மூன்று குரூப் ஆட்டங்கள் நடைபெறும். லாகூரில் இரண்டாவது அரையிறுதி நடைபெறும்.
இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெறாத பட்சத்தில் அதுவும் மார்ச் 9 அன்று லாகூரில் நடைபெறுகிறது. இந்தியா தகுதி பெற்றால் அது துபாயில் நடைபெறுகிறது. இரு அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா பங்கேற்கும் குரூப் ஆட்டங்கள் மற்றும் முதல் அரையிறுதி துபாயில் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கராச்சியில் பிப்ரவரி 19 அன்று மோதுகின்றன.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள்
பாகிஸ்தான்
இந்தியா
நியூசிலாந்து
வங்கதேசம்
பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள்
ஆஸ்திரேலியா
ஆப்கானிஸ்தான்
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை இந்தியாவுக்கான அட்டவணை
பிப்ரவரி 20 - வங்கதேசம் vs இந்தியா, துபாய்
பிப்ரவரி 23 - பாகிஸ்தான் vs இந்தியா, துபாய்
மார்ச் 2 - நியூசிலாந்து vs இந்தியா, துபாய்
மார்ச் 4 - முதல் அரையிறுதி, துபாய்
மார்ச் 5 - இரண்டாவது அரையிறுதி, லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 9 - இறுதி ஆட்டம், லாகூர் (இந்தியா தகுதி பெற்றால், இறுதி ஆட்டம் துபாயில் நடைபெறும்)
மார்ச் 10 - மாற்று நாள்
முழு அட்டவணை
பிப்ரவரி 19 - பாகிஸ்தான் vs நியூசிலாந்து, கராச்சி
பிப்ரவரி 20 - வங்கதேசம் vs இந்தியா, துபாய்
பிப்ரவரி 21 - ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா, கராச்சி
பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, லாகூர்
பிப்ரவரி 23 - பாகிஸ்தான் vs இந்தியா, துபாய்
பிப்ரவரி 24 - வங்கதேசம் vs நியூசிலாந்து, ராவல்பிண்டி
பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி
பிப்ரவரி 26 - ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து, லாகூர்
பிப்ரவரி 27 - பாகிஸ்தான் vs வங்கதேசம், ராவல்பிண்டி
பிப்ரவரி 28 - ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா, லாகூர்
மார்ச் 1 - தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து, கராச்சி
மார்ச் 2 - நியூசிலாந்து vs இந்தியா, துபாய்
மார்ச் 4 - முதல் அரையிறுதி, துபாய்
மார்ச் 5 - முதல் அரையிறுதிக்கான மாற்று நாள்
மார்ச் 5 - இரண்டாவது அரையிறுதி, லாகூர்
மார்ச் 6 - இரண்டாவது அரையிறுதிக்கான மாற்று நாள்
மார்ச் 9 - இறுதி ஆட்டம் (இந்தியா தகுதிபெற்றால், துபாயில் நடைபெறும்)
மார்ச் 10 - இறுதி ஆட்டத்துக்கான மாற்று நாள்
அனைத்து ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளன.