ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை அக்டோபர் 31-க்குள் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025-2027 பருவத்துக்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ நேற்று (செப். 29) வெளியிட்டது. இதில், தக்கவைத்தல், ஆர்டிஎம் முறைகளில் ஓர் அணி அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களையும் (உள்நாடு & வெளிநாடு), அதிகபட்சமாக இரு சர்வதேச அனுபவம் இல்லா வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அணி ஒரு அன்கேப்டு வீரரை தக்கவைக்கும் நிலையில், அவர் அக்டோபர் 31-க்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினாலும், அன்கேப்டு வீரராகவே கருதப்படுவார்.
ஒருவேளை ஒரு வீரர் அக்டோபர் 31-க்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி, அவர் மெகா ஏலத்துக்கு முன்பு தனது அணியால் தக்கவைக்கப்படாத நிலையில், சர்வதேச அனுபவம் கொண்ட வீரராக (கேப்டு) கருதப்படுவார்.