ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை: ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் இரண்டாவது ஐசிசி கோப்பை இது.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை: ரோஹித் சர்மா
ANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என அறிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பையை இறுதிச் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து தலைமையிலான அணிகள் துபாயில் இன்று மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் இரண்டாவது ஐசிசி கோப்பை இது. இதன்மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இறுதிச் சுற்றுக்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு, இந்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

"எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை. தற்போது எது நடக்கிறதோ, அது தொடரும். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறப்போவதில்லை" என்றார் ரோஹித் சர்மா.

37 வயது ரோஹித் சர்மா வரும் ஏப்ரல் 30 அன்று 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in