நார்வே செஸ் தொடர்: 3, 4 -வது இடங்களைப் பிடித்த பிரக்ஞானந்தா, வைஷாலி

உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சன் முதலிடத்தைப் பிடித்து 6-வது முறையாக நார்வே செஸ் தொடரை வென்றுள்ளார்.
நார்வே செஸ் தொடர்
நார்வே செஸ் தொடர்@NorwayChess
1 min read

நார்வே செஸ் தொடர் முடிந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் முறையே 3, 4 -வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

நார்வே செஸ் தொடர் கடந்த மே 27 அன்று தொடங்கியது. இத்தொடரில் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் வைஷாலி உட்பட 6 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இத்தொடரில் 10 சுற்றுகளும் முடிவடைந்த நிலையில், உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து நார்வே செஸ் தொடரை வென்றுள்ளார். இதன் மூலம் அவர் 6-வது முறையாக நார்வே செஸ் தொடர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இத்தொடரில் கார்ல்சன் மற்றும் நடப்பு உலக சாம்பியன் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தார். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன் கடைசி இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் பிரிவில் வைஷாலி 4-வது இடத்தைப் பிடித்தார். நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜுன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in