நார்வே செஸ் தொடர்: கார்ல்சனிடம் தோல்வியடைந்த பிரக்ஞானந்தா

புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.
பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரின் 8-வது சுற்றில், பிரக்ஞானந்தா உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார்.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இத்தொடரின் 8-வது சுற்றில் பிரக்ஞானந்தா உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். முன்னதாக இத்தொடரின் 3-வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா இம்முறை தோல்வி அடைந்தார். ‘கிளாசிகல்’ முறையில் இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து ஆர்மகெடான் முறையில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார் கார்ல்சன்.

இன்னும் 2 சுற்றுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. கார்ல்சன் 14.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் 8 சுற்றுகளின் முடிவில் இந்தியாவைச் சேர்ந்த வைஷாலி 11.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in