ஐசிசி ஒருநாள் அணியில் ஓர் இந்தியருக்கும் இடமில்லை!

இந்தியா உள்பட பல பெரிய அணிகள் கடந்த வருடம் டி20 மற்றும் டெஸ்டுகளில் அதிக கவனம் செலுத்தின.
ஐசிசி ஒருநாள் அணியில் ஓர் இந்தியருக்கும் இடமில்லை!
ANI
1 min read

2024-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குக் கெளரவம் அளிக்கும் விதமாக ஐசிசி ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் ஓர் இந்திய வீரரும் இடம்பெறவில்லை. காரணம், கடந்த வருடம் இந்திய அணி 3 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியது. இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோற்ற இந்திய அணி, 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்றது.

2024-ம் ஆண்டுக்கான ஒருநாள் அணியில் இலங்கையின் பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, ஹசரங்கா ஆகிய நால்வரும் பாகிஸ்தானின் சயிம் அயூப், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப் ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கஸன்ஃபர் ஆகிய மூவரும் மேற்கிந்தியத் தீவுகளின் ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட் என 11 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தியா உள்பட பல பெரிய அணிகள் கடந்த வருடம் டி20 மற்றும் டெஸ்டுகளில் அதிக கவனம் செலுத்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவாகக் கவனம் செலுத்தியதால் இப்பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in