பாராலிம்பிக்ஸ் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நிதேஷ் குமாரும் கிரேட் பிரிட்டனின் டேனியல் பெத்தேலும் மோதினார்கள்.
இதில் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் நிதேஷ் குமார் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஏற்கெனவே, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்த பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.