
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீதா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் போட்டி நாளை அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீதா அம்பானி 100% வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீதா அம்பானி முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையை அப்போது அவர் படைத்தார்.
இந்நிலையில் தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீதா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.