இந்தியா டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து வில்லியம்சன் விலகியுள்ளார்.
இந்தியா டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
ANI
1 min read

இந்திய டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடர் அக். 16 அன்று தொடங்குகிறது. இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இலங்கைக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததைத் தொடர்ந்து, நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிம் செளதி தெரிவித்தார். எனவே, இந்தியத் தொடரில் டாம் லேதம் கேப்டனாக செயல்படுவார்.

காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து வில்லியம்சன் விலகியுள்ளார். இதுவரை டெஸ்டில் விளையாடாத மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிய அனைவரும், இத்தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

பிரேஸ்வெலுக்கு குழந்தை பிறக்க உள்ளதால், அவர் முதல் டெஸ்டில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக 2, 3-வது டெஸ்டுக்கான அணியில் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி

டாம் லேதம் (கேப்டன்), டாம் பிளென்டல், பிரேஸ்வெல் (முதல் டெஸ்டில் மட்டும்), மார்க் சாப்மேன், கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஒ ரோர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2-வது மற்றும் 3-வது டெஸ்டுகளில் மட்டும்), டிம் சௌதி, வில்லியம்சன் (2-வது மற்றும் 3-வது டெஸ்டுகளில் மட்டும்), வில் யங்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in