

இந்தியாவுக்கு எதிராக அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 தொடக்கத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்கு மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலும் டி20 தொடருக்கு மிட்செல் சான்ட்னர் தலைமையிலும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காயம் காரணமாக ஒருநாள் தொடரில் சான்ட்னர் சேர்க்கப்படவில்லை.
எஸ்ஏ20-யில் விளையாடுவதால் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியில் இடம்பெறவில்லை. எஸ்ஏ20-யில் டர்பன் சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக வில்லியம்சன் விளையாடுகிறார். மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதால் டாம் லேதம் ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோருக்கு ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரில் மிட்செல் ஹே மற்றும் டி20 தொடரில் டெவான் கான்வே கீப்பிங் பொறுப்பை ஏற்கவுள்ளார்கள்.
நியூசிலாந்து ஒருநாள் அணி
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஸாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜேடன் லென்னாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்ரி நிகோல்ஸ், கிளென் ஃபிளிஃப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
நியூசிலாந்து டி20 அணி
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் டஃபி, ஸாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்ரி, கைல் ஜேமிசன், பெவான் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் ஃபிளிஃப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், இஷ் சோதி
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் - ஜனவரி 11, வதோதரா
இரண்டாவது ஒருநாள் - ஜனவரி 14, ராஜ்கோட்
மூன்றாவது ஒருநாள் - ஜனவரி 18, இந்தூர்
டி20 தொடர்
முதல் டி20 - ஜனவரி 21, நாக்பூர்
இரண்டாவது டி20 - ஜனவரி 23, ராய்பூர்
மூன்றாவது டி20 - ஜனவரி 25, குவஹாத்தி
நான்காவது டி20 - ஜனவரி 28, விசாகப்பட்டினம்
ஐந்தாவது டி20 - ஜனவரி 31, திருவனந்தபுரம்
New Zealand | Black Caps | Team India | New Zealand tour of India | New Zealand Squad | Michael Bracewell | Mitchell Santner |