அபிஷேக் நாயர், டென் டசாட்டே துணைப் பயிற்சியாளர்களாக நியமனம்: தகவல்

இந்திய அணி வரும் திங்கள்கிழமை மும்பையிலிருந்து கொழும்பு புறப்படுகிறது.
தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் (கோப்புப்படம்)
தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் (கோப்புப்படம்)
1 min read

இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர், டென் டசாடே மற்றும் மார்னே மார்கல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ கடந்த 9 அன்று வெளியிட்டது. எனினும், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு எதுவும் அதில் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கம்பீருடன் இணைந்துப் பணியாற்றிய அபிஷேக் நாயர், டென் டசாட்டே ஆகியோர் துணைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கல் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இவரும் ஐபிஎல் போட்டியில் கம்பீருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார். இலங்கை பயணத்துக்கு முன்பு பயிற்சியாளர்கள் குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி வரும் திங்கள்கிழமை மும்பையிலிருந்து கொழும்பு புறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in