உலகக் கோப்பைக்கு தேர்வாகாததால் பாதிக்கப்படவில்லை: நடராஜன்

"இந்திய அணியை தேர்வு செய்யும்போது என் பெயர் விவாதத்தில் இடம்பெற்றதை சாதனையாகப் பார்க்கிறேன்".
நடராஜன்
நடராஜன்ANI

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும்போது எனது பெயர் விவாதத்தில் இடம்பெற்றதை சாதனையாகப் பார்க்கிறேன் என நடராஜன் பேசியுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நடராஜன் இந்த ஐபிஎல்-ல் 8 ஆட்டங்களில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் நடராஜன் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து நடராஜன் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “நான் தேர்வு செய்யப்படுவதும், தேர்வாகாததும் எனது கையில் இல்லை. இந்திய அணியை தேர்வு செய்யும்போது என் பெயர் விவாதத்தில் இடம்பெற்றதை சாதனையாகப் பார்க்கிறேன். ஒரு பெரிய கட்டிடத்தில் ஏறவேண்டும் என்றால், ஒவ்வொரு படியாக ஏறவேண்டும். தற்சமயத்தில், சிறப்பாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற செய்யவேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது. உலகக் கோப்பைக்கு தேர்வாகாததால் பாதிக்கப்படவில்லை. நமக்கென ஒன்று நடக்கும் என்றால் அது நடந்தே தீரும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in