பஜ்ரங் புனியா இடைநீக்கம்: தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் பஜ்ரங் புனியா பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.
பஜ்ரங் புனியா இடைநீக்கம்: தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம்

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை காலவரையின்றி இடைநீக்கம் செய்வதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் பஜ்ரங் புனியா பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "மார்ச் 10-ல் நடைபெற்ற வீரர்கள் தேர்வின்போது, பஜ்ரங் புனியா தனது சிறுநீர் மாதிரிகளைத் தராமல் இருந்துள்ளார். இதன் நீட்சியாகவே, பஜ்ரங் புனியா மேற்கொண்டு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடக் கூடாது என தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடை விதித்துள்ளது" என்றார்கள்.

ஏப்ரல் 23-ம் தேதியிட்ட தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அறிக்கையில், "பஜ்ரங் புனியா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை எந்தவொரு போட்டியிலும் அவர் பங்கேற்கக் கூடாது, போட்டிக்கு முந்தைய எந்தவொரு செயல்பாட்டிலும் பங்கெடுக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தவர்களில் ஒலிம்பிக் வீரர்கள் சாக்‌ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத்துடன் முன்னணியில் இருந்தவர் பஜ்ரங் புனியா. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நாட்டுக்காக வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in