மும்பை இந்தியன்ஸ் குறித்த விமர்சனம்: அம்பத்தி ராயுடு விளக்கம்

"மும்பை அணியின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும் என்று தான் நான் கூறினேன்".
அம்பத்தி ராயுடு
அம்பத்தி ராயுடு@RayuduAmbati

மும்பை அணியில் நீண்ட காலத்திற்கு விளையாடினால் மூளை சிதறிவிடும் என்ற தனது கருத்துக்கு அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி மார்ச் 22 அன்று தொடங்கி மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அம்பத்தி ராயுடு, “மும்பை அணியில் நீண்ட காலத்திற்கு விளையாடினால் மூளை சிதறிவிடும்” என்ற கருத்தை பதிவுசெய்ய, ரசிகர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அம்பத்தி ராயுடு இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அம்பத்தி ராயுடு, “சிஎஸ்கே அணி முடிவுகளை எதிர்பார்க்காமல், தங்களது செயல்பாடுகளில் கவனம் செலுத்தும். ஆனால், மும்பை அணியை பொறுத்தவரை வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இரு அணிகளும் கடுமையாக உழைக்கும் வீரர்களைக் கொண்டது. சிஎஸ்கே அணியின் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும். மும்பை அணியில் நீண்ட காலத்திற்கு விளையாடினால் மூளை சிதறிவிடும். மும்பை அணியில் விளையாடியபோது எனது ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது” என்றார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அம்பத்தி ராயுடு, “என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டனர். மும்பை அணியின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும் என்று தான் நான் கூறினேன். அங்குள்ள நேர்மறையான அழுத்தத்தால் ஒரு வீரர் சிறந்த வீரராக மாறுவார். மும்பை அணி செய்த சாதனைகளை வைத்து பார்க்கும்போது எத்தனை திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது என்பது தெரியும். நான் மும்பை அணியில் விளையாடிய 8 வருடங்களை மிகவும் நேசித்தேன். மும்பை அணி தயவு செய்து வேகமாக ஆட்டங்களை வெல்லுங்கள்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in