மே 1 வரை சிஎஸ்கேவுக்கு விளையாட முஸ்தஃபிஸுருக்கு அனுமதி

முஸ்தஃபிஸுர் ரஹ்மான் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மே 1 வரை சிஎஸ்கேவுக்கு விளையாட முஸ்தஃபிஸுருக்கு அனுமதி
மே 1 வரை சிஎஸ்கேவுக்கு விளையாட முஸ்தஃபிஸுருக்கு அனுமதிANI

மே 1 வரை சிஎஸ்கேவுக்கு விளையாட முஸ்தஃபிஸுருக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

வங்தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மே 3 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் முஸ்தஃபிஸுர் ரஹ்மானுக்கு ஐபிஎல் போட்டியில் ஏப்ரல் 30 வரை விளையாட அனுமதி வழங்கியது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

மே 1 அன்று சிஎஸ்கே அணி பஞ்சாபுக்கு எதிராக விளையாடவுள்ளதால் அந்த ஆட்டத்தை முடித்துவிட்டு அவர் நாட்டுக்கு திரும்பவேண்டும் என்ற கோரிக்கையை சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் பிசிசிஐ முன்வைத்தது.

இதைத் தொடர்ந்து அந்த கோரிக்கையை ஏற்று முஸ்தஃபிஸுருக்கு மே 1 வரை ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்ற முஸ்தஃபிஸுர் ரஹ்மான் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in