எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி: தோனி குறித்து முஸ்தஃபிஸுர்

வங்தேசம் - ஜிம்பாப்வே இடையிலான டி20 தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணியில் இருந்து விலகினார் முஸ்தஃபிஸுர்.
முஸ்தஃபிஸுர்
முஸ்தஃபிஸுர்@Mustafiz90

தோனி போன்ற ஜாம்பவான்களுடன் பயணம் செய்தது சிறப்பான உணர்வாக இருந்தது என முஸ்தஃபிஸுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

வங்தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. முன்னதாக முஸ்தஃபிஸுர் ரஹ்மானுக்கு ஐபிஎல் போட்டியில் மே 1 வரை விளையாட அனுமதி வழங்கியது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

இதைத் தொடர்ந்து மே 1 அன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு சென்னை அணியில் இருந்து விலகினார் முஸ்தஃபிஸுர்.

முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்ற முஸ்தஃபிஸுர் ரஹ்மான் நடப்பு ஐபிஎல்-ல் 9 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தோனி குறித்து முஸ்தஃபிஸுர் தனது எக்ஸ் தளத்தில், “அனைத்திற்கும் நன்றி. உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் பயணம் செய்தது சிறப்பான உணர்வாக இருந்தது. எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க அறிவுரைகளை நினைவில் வைத்திருப்பேன். மீண்டும் உங்களை விரைவில் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in