ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற வங்கதேசப் பிரபலம்!

அதிக எண்ணிக்கையிலான ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வங்கதேச வீரர் என்கிற பெருமையைக் கொண்டுள்ள...
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற வங்கதேசப் பிரபலம்!
ANI
1 min read

முஷ்ஃபிகுர் ரஹிம்.

இந்த வங்கதேச விக்கெட் கீப்பர் - பேட்டரைத் தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது.

இதுவரை 274 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி அதிக எண்ணிக்கையிலான ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வங்கதேச வீரர் என்கிற பெருமையைக் கொண்டுள்ள 37 வயது முஷ்ஃபிகுர் ரஹிம், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து வெளியேறிய ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அடுத்ததாக முஷ்ஃபிகுர் ரஹிமும் அவர் வழியில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பையில் வங்கதேச அணியால் ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாமல் போனது. இந்தியாவுக்கு எதிராக டக் அவுட் ஆன முஷ்ஃபிகுர், நியூசிலாந்துக்கு எதிராக 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கடந்த 15 ஒருநாள் ஆட்டங்களில் அவரால் ஒரு அரை சதம் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஓய்வு முடிவை அவர் எடுத்துள்ளார்.

முஷ்ஃபிகுர் ரஹிம், ஒருநாள் கிரிக்கெட்டில் 9 சதங்கள், 49 அரை சதங்களுடன் 7,795 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 36.42.

உலகளவில் எங்களுடைய சாதனைகள் பெரிதளவில் இல்லாமல் போனாலும் என் நாட்டுகளாகக் களமிறங்கிய தருணங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமான அர்ப்பணிப்பையே நான் அளித்துள்ளேன். கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலாக அமைந்தன. இதுதான் என் விதி என்பதை அறிய நேர்ந்துள்ளேன் என்று தன்னுடைய ஓய்வு அறிவிப்பில் முஷ்ஃபிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2007 உலகக் கோப்பையில் தனது முதல் முத்திரையைப் பதித்த முஷ்ஃபிகுர், இந்தியாவுக்கு எதிரான மறக்க முடியாத ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் அடித்து இந்தியாவின் மோசமான தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

102 டி20 ஆட்டங்களில் விளையாடிய முஷ்ஃபிகுர், கடந்த டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றார். இதுவரை 94 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அவர், 100 டெஸ்டுகளை விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்கிற பெருமையை விரைவில் அடையவுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in