எம்சிசி - முருகப்பா ஹாக்கிப் போட்டி: மீண்டும் சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே அணி!

முதலிடத்தைப் பிடித்த ரயில்வே அணிக்கு ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையும் 2-வது இடத்தைப் பிடித்த ஐஓசிஎல் அணிக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்பட்டன.
எம்சிசி - முருகப்பா ஹாக்கிப் போட்டி: மீண்டும் சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே அணி!
@prashant_k_c_02
1 min read

எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் ரயில்வே அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

95-வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் செப். 19 அன்று தொடங்கியது.

இப்போட்டியில் ரயில்வே மேம்பாட்டு வாரியம், இந்திய ராணுவம், தமிழ்நாடு ஹாக்கிப் பிரிவு, கர்நாடக ஹாக்கி அணி உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.

இதில், ரயில்வே மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 5-3 என்ற கணக்கில் ரயில்வே அணி ஐஓசிஎல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ரயில்வே அணி முதலில் 3 கோல்களை அடித்தது. இதைத் தொடர்ந்து ஐஓசிஎல் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடிக்க, ஆட்டம் 3-2 என்ற கணக்கில் விறுவிறுப்பானது. இதன் பிறகு ரயில்வே அணி மீண்டும் 2 கோல்களை அடிக்க, ஐஓசிஎல் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.

முடிவில் ரயில்வே அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டும் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

முதலிடத்தைப் பிடித்த ரயில்வே அணிக்கு ரூ. 7 லட்சம் பரிசுத்தொகையும் 2-வது இடத்தைப் பிடித்த ஐஓசிஎல் அணிக்கு ரூ. 5 லட்சமும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in